பிராந்திய செய்திகள்
கரையோர ரயில் சேவையில் தாமதம்: பயணிகள் அவதி
கரையோர ரயில் சேவையில் தாமதம்: பயணிகள் அவதி

கரையோர மார்க்கத்தில் ரயில் சேவையில் தாமதம் ஏற்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதனால், கொழும்பு கோட்டைக்கு செல்லும் ரயில்கள் தாமதமாக இயக்கப்படும் என ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.
இரத்மலானை – கல்கிசை ரயில் நிலையங்களுக்கு இடையிலான ரயில் மார்க்கத்தில் தண்டவாளம் உடைந்த காரணத்தினாலேயே கரையோர ரயில் மார்க்கத்தில் ரயில் சேவையில் தாமத நிலை ஏற்பட்டுள்ளது.
இருப்பினும், கொழும்பு கோட்டை வரையான அனைத்து அலுவலக ரயில்களும் தாமதமின்றி இயங்குவதாக ரயில்வே திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.