Saturday, September 7, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local Newsரயிலில் உறங்கிய பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

ரயிலில் உறங்கிய பெண்ணுக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்.!

கணவருடன் ரயிலில் கொழும்புக்குப்  பயணித்த பெண் ஒருவரின் கைப்பையிலிருந்த சுமார்  30 இலட்சம் ரூபா பெறுமதியான   தங்க நகைகள் மற்றும் பணம் திருடப்பட்ட சம்பவம் தொடர்பில் கெக்கிராவ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

பேருவளை, கங்கனாங்கொட பிரதேசத்தில் வசிக்கும் 28 வயதுடைய  பெண் ஒருவர் செய்த முறைப்பாட்டின் பிரகாரம் பொலிஸார் இந்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

சுதந்திர தினத்தன்று தனது கணவருடன்  ரயிலில் கொழும்பு நோக்கி பயணித்தபோது தான் உறங்கி விட்டதாகவும் ரயில்  கெக்கிராவ ரயில் நிலையத்தை கடந்து சிறிது தூரம் சென்றபோது தான் விழித்துப் பார்த்தபோது தனது நகைகள், பணம் காணாமல்  போயிருந்ததாகவும் அவர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.

இந்த திருட்டில் ஈடுபட்ட நபர் அல்லது குழுவைக் கைது செய்ய கெக்கிராவ பொலிஸ் அதிகாரிகள் குழு விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்