அம்பாறை மாவட்டத்தில் கஞ்சி குடி ஆறு மாவீரர் துயிலும் இல்லம் எழுச்சி
அம்பாறை மாவட்டத்தில் கஞ்சி குடி ஆறு மாவீரர் துயிலும் இல்லம் எழுச்சி

அம்பாறை மாவட்டத்தில் கஞ்சி குடி ஆறு மாவீரர் துயிலும் இல்லம் எழுச்சி பெற்றது.
தமிழீழ தேசிய மாவீரர் நாள் 27. 11. 2024. அன்று அம்பாறை மாவட்டத்தில் இருக்கும் கஞ்சி குடி ஆறு
மாவீரர் துயிலும் இல்லத்தில் வீர வணக்க நிகழ்வு நேற்றைய தினம் வெகு எழுச்சியாக மாவீரர்களின் பெற்றோர் மற்றும் சிவில் சமூக பிரதிநிதிகள் சமூக ஆர்வலர்கள் ஊடகவியலாளர்கள் மற்றும் பிரதேச மக்கள் என பலருடைய எழுச்சிமிகு பங்களிப்புடன் அனுஷ்டிக்கப்பட்டது.

குறித்த மாவீரர் நினைவேந்தல் கட்டமைப்புகளை ஒருங்கிணைத்து முறையாக அதன் அணிவகுப்புகளை முன்னெடுத்த அம்பாறை மாவட்ட தமிழ் தேசிய பற்றாளரும் எமது ஊடகவியலாளருமான திரு. பிரகாஷ் அவர்கள் முன் நின்று செயல்பட்டது இதில் குறிப்பிடத்தக்கதாகும்.

பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் பொருளாதார பின்னடைவுகள் இருந்த நிலையிலும் கூட மாவீரர்களுக்கான தங்களுடைய அஞ்சலிகளை இயற்கை சீற்றத்தை கூட பொருட்படுத்தாமல் தொடர்ந்து முன்னெடுத்து மாவீரர்களுக்கு அஞ்சலி செலுத்தியமை குறிப்பிடத்தக்கதாகும்.