பிராந்திய செய்திகள்வட மாகாண செய்திகள்
யாழ்ப்பாணத்தில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்!

யாழ்ப்பாணத்தில் இறந்த நிலையில் கரையொதுங்கும் ஆமைகள்! யாழ்ப்பாணம், வடமராட்சியில் இறந்த நிலையில் இரண்டு ஆமைகள் கரையொதுங்கியுள்ளன.
யாழ்ப்பாணம் வடமராட்சியில் உள்ள கட்டைக்காட்டு கடற்கரையில் இன்றைய தினம் (05.02.2024) ஆமைகள் கரையொதுங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் வடமராட்சி கிழக்கில் தொடர்ச்சியாக இவ்வாறு ஆமைகள் இறந்த நிலையில் கரையொதுங்கி வருகின்றன.
கடல் கொந்தளிப்பு
கடல் கொந்தளிப்பாக காணப்படுவதனால் காயமடைந்த நிலையில் இவ்வாறு ஆமைகள் கரையொதுங்குவதாக அப்பகுதி கடற்றொழிலாளர்கள் தெரிவித்துள்ளனர்.