இலங்கையின் 76வது தேசிய சுதந்திர தினம் நேற்று அனுஸ்டிக்கப்பட்டது. மட்டக்களப்பில் சாரணிய மாணவர்களினால் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி சாரண மாணவர்களின் ஏற்பாட்டில் இந்த ஆண்டும் தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் சிறப்பாக நடைபெற்றன.
மெதடிஸ்த மத்திய கல்லூரியின் குழு சாரணர் தலைவர் எம்.சந்திரசுசர்மன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண சுகாதார திணைக்களத்தின் பொதுச்சுகாதார திட்டமிடல் மற்றும் தொழில்நுட்ப பிரிவின் விசேட வைத்திய நிபுணர் டாக்டர் அழகையா லதாகரன் பிரதம அதிதியாக கலந்துகொண்டார்.
இதன்போது அதிதிகள் சாரணிய மாணவர்களினால் தேசிய கொடிகள் அசைத்து பண்பாட்டு வாத்தியங்களுடன் அழைத்துவரப்பட்டு தேசிய சுதந்திர தின நிகழ்வுகள் நடைபெற்றன.
இதன்போது பிரதம அதிதியினால் தேசியக்கொடியேற்றப்பட்டு தேசிய கீதம் இசைக்கப்பட்டதுடன் சிறப்புரைகளும் நிகழ்வுகளும் நடைபெற்றன.
இந்நிகழ்வில் சிங்கிதி சாரணர் தலைவர் திருமதி எல்.ஜெயந்திரன், குருளைச் சாரணிய தலைவர்களான திருமதி.சி.பஞ்சேந்திரன், என்.பிரதீபன் மற்றும் சாரணர் தலைவர் எஸ். சுகுவரன், ரோவர் லீடர், என்.திசெந்திரா, சாரணிய மாணவர்கள், குருளைச் சாரணிய மாணவர்கள், சிங்கிதி சாரணிய மாணவர்கள், பெற்றோர் என பலர் கலந்து கொண்டனர்.
இலங்கையின் தேசிய சுதந்திர தினம் மெதடிஸ்த மத்திய கல்லூரி சாரண மாணவர்களினால் தொடர்ச்சியாக அனுஸ்டிக்கப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது