அம்பாறை மாவட்டத்தில் சங்கு வேட்பாளர் பிரகாஷ்க்கு வலுக்கும் ஆதரவு.!!
அம்பாறை மாவட்டத்தில் சங்கு வேட்பாளர் பிரகாஷ்க்கு வலுக்கும் ஆதரவு.!!
அம்பாறை மாவட்டத்தில் சங்கு வேட்பாளர் பிரகாஷ்க்கு வலுக்கும் ஆதரவு.!!
இம்முறை இலங்கை பாராளுமன்ற தேர்தலில் வழமைக்கு மாறாக அளவுக்கு அதிகமான கட்சிகள் களமிறங்கியிருக்கின்றன. தேசிய கட்சிகள் உட்ப பெரும்பாலான சுயேட்சைக்குழுக்களும் தேர்தல் களத்தில் குதித்து இலங்கை தேர்தல் களம் சூடுபிடித்திருக்கிறது.
இம்முறை இளைஞர்கள் அதிகம்பேர் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பதிவுசெய்யப்பட்ட கட்சிகள் உட்பட சுயேட்சயாகவும் களமிறங்கியுள்ளமை இலங்கை வடகிழக்கு அரசியலில் புதிய விடயமாக பார்க்கப்படுகிறது.
படித்த இளைஞர்கள் பல்கலைக்கழகபட்டதாரிகள் ஆசிரியர்கள் சட்டத்தரணி உட்பட இன்னும் பல்வேறு துறைகளில் இருக்கும் இளைஞர்கள் களம் காணும் ஒரு புதிய யுகமாக இந்த தேர்தல் இம்முறை களம் காண இருக்கிறது.
அந்த வகையில் அம்பாறை மாவட்டம் என்பது தமிழர்களின் இருப்பை தக்கவைக்க ஒரு நிலையான நிரந்தரமான அரசியல் தலமை இல்லாத ஒரு மாவட்டமாக காணப்படுகிறது.
கடந்தகாலங்களில் அம்பாறை மாவட்டங்களில் மாறி மாறி ஓட்டு அரசியல் செய்து வந்த கட்சிகள் மீது மக்கள் வெறுத்துப்போய் இருக்கின்ற இந்த சந்தர்ப்பத்தில் புதிதாக களம் இறங்கியிருக்கிறார் இராஜகுமார் பிரகாஷ் எனும் இளைஞன்.
கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாகவும் அரசியலுக்கு அப்பாற்பட்டு மக்களோடு மக்களாக நின்று பல அமைப்புகள் ஊடாகவும் நிறுவனங்கள் ஊடாகவும் மக்கள் சார்ந்த பல வேலைத்திட்டங்களை நடத்த முன்னின்று உழைத்த ஒரு இளைஞனாக இவர் பார்க்கப்படுகிறார்.
ஓட்டு அரசியல் செய்யும் அரசியல் வாதிகளை ஓரங்கட்டவேண்டும். புதிய மாற்றம் வேண்டும். இளைஞர்கள் களத்தில் இறங்கி துடிப்புடன் மக்களுக்கு பணியாற்ற வேண்டும் என்கின்ற ஆசையோடு தான் அரசியல் களத்தில் நிற்பதாக குறிப்பிடுகிறார் இராஜகுமார் பிரகாஷ்.
ஐனநாயக தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில் சங்கு சின்னத்தில் 5ம் இலக்கத்தில் போட்டியிடும் இராஜகுமார் பிரகாஷ் அவர்களுக்கு பின்னால் ஒரு இளைஞர் பட்டாளமே ஒன்றுதிரட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அம்பாறை மாவட்டத்தில் இருக்கும் வெற்றிடம்.. இனைஞர்கள் அரசியல் களத்தில் இல்லாமை போன்ற காரணங்கள் ஒரு இளைஞனுக்கு சந்தர்ப்பத்தை அளிக்க விரும்புவதாகவும் சிலர் கருத்து தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.