கிராந்துருகோட்டையில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு; வனப்பகுதிகளில் பாதுகாப்பு எச்சரிக்கை!
கிராந்துருகோட்டையில் காட்டு யானை தாக்கியதில் ஒருவர் உயிரிழப்பு; வனப்பகுதிகளில் பாதுகாப்பு எச்சரிக்கை!
கிராந்துருகோட்டை செனவிகம பகுதியில் வியாழக்கிழமை (07) இரவு காட்டு யானையின் தாக்குதலுக்கு இலக்காகி ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் இலக்கம் 22, செனவிகம, உல்ஹிட்டிய, கிராந்துருகோட்டை பகுதியை சேர்ந்த 57 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்
.
நேற்று இரவு 9.00 மணியளவில் தனது காணிக்கு வந்தகாட்டு யானையை விரட்ட முற்பட்ட போது யானை குறித்த நபரை தாக்கியதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
உயிரிழந்தவரின் சடலத்தை நீதிவான் பார்வையிட்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக மஹியங்கனை வைத்தியசாலை கொண்டு செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்தவின் பணிப்புரையின் பேரில் கிராந்துருகோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சுதேஷ் சதுரங்க, தலைமையில் பொலிஸ் குழுவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.