வட இலங்கை
Trending

படுகுழியில் பாயப்போகும் அர்ச்சுனா; ஊசி ஏற்றும் மயூரன்…நடந்தது என்ன?

படுகுழியில் பாயப்போகும் அர்ச்சுனா; ஊசி ஏற்றும் மயூரன்...நடந்தது என்ன?

படுகுழியில் வைத்தியர் அர்ச்சுனா வீழ்வது வெகுதொலைவில் இல்லையென இம்முறை இடம்பெறும் பொதுத்தேர்தலில் ஊசி சின்னத்தில் போட்டியிடும் சுயேட்சை குழு உறுப்பினர் சி. மயூரன் தெரிவித்துள்ளார்.

யாழ் . ஊடக அமையத்தில்   நடைபெற்ற ஊடக சந்திப்பின் போது கருத்து வெளியிட்ட அவர் வைத்தியர் அருச்சுனா சாவகச்சேரி வைத்தியசாலை பிரச்சனைகளை வெளிக்கொண்டு வந்த கால பகுதியில் நெருக்கடிகளை சந்தித்த போது அவர் நலன் சார்ந்து நானும் எங்கள் நண்பர்கள் சிலருமே செயற்பட்டோம்.

படுகுழியில், பாயப்போகும், அர்ச்சுனா, ஊசி

தற்போது புதிதாக சேர்ந்து கொண்ட சிலராலேயே பிரச்சனைகள் உருவாகியுள்ளன. அதனால் மக்கள் சரியான துரோகிகளை இனம் காண வேண்டும் என்கிறார்.

புகழ் , மக்கள் செல்வாக்கு வந்த பிறகு இணைந்து கொண்டவர்கள் அல்ல நாம்,அருச்சுனாவிற்கு பெயர் புகழ் வர முதலே அவரை பாதுகாக்க வேண்டும் என ஓடிக்கொண்டிருந்தோம்.

வேட்புமனு தாக்கல் செய்த 11ஆம் திகதியில் இருந்து , இன்றைக்கு 31ஆம் திகதி வரையிலான கடந்த 20 நாட்களில் அருச்சுனாவின் உண்மையான நலன்விரும்பிகளிடம் இருந்து பிரிக்கப்பட்டார்.

அருச்சுனாவின் நலன் விரும்பிகளாக இருந்த பலர் இன்று அருச்சுனாவால் துரோகி என கூறப்பட்டதன் பின்னால் பெரும் சக்தி ஒன்று உள்ளது என்பதனை நான் பகிரங்கமாக கூறுகிறேன்.

யாரோ ஓரிருவரை நம்பி அருச்சுனா தனக்கு நல்லது நடக்கும் என நினைக்கிறார். அவ்வாறு நடந்தால் எமக்கு பரவாயில்லை.ஆனால் எனது பார்வையில் அருச்சுனாவிற்கு பெரும் குழி வெட்டுகின்றனர்.

கூட நின்று குழி வெட்டி விழுத்திய பின்னர் அவரை மீட்க போவதும் நாமே.
அதேவேளை பிரச்சனை தொடங்கிய காலத்தில் இருந்து இன்று வரையில் அருச்சுனாவிற்கு வெளிநாட்டில் இருந்து நிதி வந்ததா ? இல்லையா என்பது தொடர்பில் எனக்கு எதுவும் தெரியாது என்கிறார்.
ஆனால் அருச்சுனாவிற்கு தனிப்பட்ட ரீதியில் பணம் வந்திருந்தால் எவ்வளவு பணம் வந்தது? என்பது தொடர்பிலான தெளிவு எங்களிடம் இல்லை என்பதே எங்கள் நிலைப்பாடு எனவும் சி. மயூரன் தெரிவித்துள்ளார்.

Back to top button