களனி கங்கையிலிருந்து நேற்று வியாழக்கிழமை (31) மாலை ஆணொருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பேலியகொடை பொலிஸார் தெரிவித்தனர்.
சடலமாக மீட்கப்பட்டவர் தொடர்பில் இதுவரை எந்தவித தகவல்களும் கிடைக்கவில்லை என பொலிஸார் தெரிவித்தனர்.
45 முதல் 50 வயது மதிக்கத்தக்க நபரொருவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.சடலமானது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பேலியகொடை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.