பிரதான செய்திகள்பாராளுமன்ற தேர்தல்
Trending

மனோ கணேசன் குறிவைக்கப்பட்டாரா ?

நேற்று இரவு நடந்த அதிர்ச்சி அனர்த்தம் !

மனோ கணேசன் குறிவைக்கப்பட்டாரா ?

நேற்று இரவு நடந்த அதிர்ச்சி அனர்த்தம் !

நேற்று இரவு வடகொழும்பிலே, கதிரானவத்தை பிரதேசத்திலே, தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவர், மனோ கணேசனும் அவர் சக கொழும்பு மாவட்ட வேட்பாளர், ARV லோஷனும், ஆதரவாளர்களுடன் வீடு வீடாக சென்று துண்டுப்பிரசுரங்கள் விநியோகித்து பிரசாரம் செய்து கொண்டிருந்த போது,
அவர்களது பிரசாரக் குழுவை நோக்கி திடீரென ஒரு பாரந்தூக்கி இயந்திரம் பின்பக்கமாக வந்து மோதியது.

இரவு 8 மணியளவில் இந்தச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இருபுறமும் வீடுகள் அமைந்த ஓர் ஒடுங்கிய அந்த ஒழுங்கையில் இருந்த குறுகிய பாதையில் நடந்து சென்று கொண்டிருந்த போது, reverse இல் வந்த வாகனம் மோதியதில், மனோ கணேசனுக்கு முன்னால் சென்று கொண்டிருந்த அவரது சாரதியும் தற்போதைய தனிப்பட்ட பாதுகாவலருமான ரத்நாயக்க கீழே விழுந்ததுடன்
அந்தப் பாரந்தூக்கியின் பாரிய சக்கரங்கள் அவரது பாதங்களின் மேல் ஏறி நசுக்கியதன் காரணமாக உடனே அவர் கொழும்பு அவசர சிகிச்சைப் பிரிவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

இந்நிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்த மட்டக்குளிய பொலிஸ் நிலைய போக்குவரத்துப்பிரிவு பொறுப்பதிகாரி கருணாரத்ன உட்பட்ட அதிகாரிகள் உடனடியாக அந்தப் பாரந்தூக்கியை அப்போது
செலுத்திய ஓட்டுநரையும்,அவர் பணிபுரியும் Galaxy Steels என்ற நிறுவனத்தின் உரிமையாளரையும் பொலிஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

தற்போது விசாரணைகள் இடம்பெற்றுவருகின்றன.

பாரந்தூக்கி பொலிஸ் நிலையத்தின் பொறுப்பில் இருக்கின்றது.

இந்நிலையில் இந்தச் சம்பவம் தற்செயலாக நடந்த ஒரு விபத்தா? அல்லது மனோ கணேசன் குறிவைக்கப்பட்டாரா ?
அல்லது அவரது சக வேட்பாளர் லோஷன், அல்லது ஆதரவாளர்களை அச்சுறுத்த நடந்த ஒரு திட்டமிடப்பட்ட செயலா என்பது குறித்து சகல கோணங்களிலும் விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து உடனடியாக பிரசார நடவடிக்கைகளை நிறுத்திய மனோ கணேசன், சக வேட்பாளர் லோஷனையும் அழைத்துக்கொண்டு கொழும்பு அவசர சிகிச்சைப் பிரிவுக்குச் சென்று அங்கே சிகிச்சை பெற்றுவரும் தனது சாரதியும் தனிப்பட்ட பாதுகாவலருமான ரத்நாயக்கவைப் பார்வையிட்டுக்கொண்டிருக்கிறார்.

இதுவரை வெளியான தகவல்கள் இவை.

கட்சி வட்டாரங்களின் தகவல்படி
மனோ கணேசன், லோஷன் மற்றும் ஏனைய ஆதரவாளர்கள் எவருக்கும் பாதிப்பேதும் இல்லை என அறியவருகிறது.

Back to top button