யாழில் உயர்தர மாணவர்களுக்கான செயலமர்வு…
யாழில் உயர்தர மாணவர்களுக்கான செயலமர்வு...
யாழில் இம்முறை க.பொ .த உயர்தர பரீட்சையில் தோற்றும் மாணவர்களுக்கான செயலமர்வொன்று இடம்பெற்றுள்ளது.
இந்த செயலமர்வானது,யாழ் பல்கலைக்கழக விவசாய பீடத்தின் சமூகத்திற்கு வழங்கும் சேவையின் ஒரு அங்கமாக உயர்தர உயிரியல் மற்றும் உயிர்முறைமைகள் தொழில்நுட்ப பிரிவு மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கென விவசாய பீடத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சி விவசாய பீடத்தில் நடைபெற்றது.
விவசாய பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் க.பகீரதன் தலைமையில் நடைபெற்ற குறித்த செயலமர்வில் பேராசிரியர்கள் ,விரிவுரையாளர்கள் ,பல்கலைக்கழக மாணவர்கள் கலந்து கொண்டு செயன்முறைகளையும் விளக்கங்களையும் மாணவர்களுக்கு வழங்கினர்.
இதேவேளை ,மன்னார், முல்லைத்தீவு, மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களைச்சேர்ந்த மாணவர்கள் மற்றும் குறித்த பாடங்களை கற்பிக்கின்ற ஆசிரியர்கள் கலந்து கொண்டு குறித்த செயலமர்வை முழுநிறைவாக்கியமை குறிப்பிடத்தக்கது.