பிரதான செய்திகள்
Trending
பாடசாலை விடுமுறையில் பாகுபாடு: காரணம் என்ன?
பாடசாலை விடுமுறையில் பாகுபாடு: காரணம் என்ன?
பாடசாலை விடுமுறையில் பாகுபாடு உள்ளதாக மக்கள் தற்போது விசனம் தெரிவிக்கின்றனர்.
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய மற்றும் ஊவா மாகாணங்களின் தமிழ் பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்க பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளதே இதற்கு காரணமாகும்.
தீபாவளி பண்டிகை நாளை (31) கொண்டாடப்படவுள்ள நிலையில், தீபாவளி தினத்துக்கு மறுநாள் தமிழ் மாணவர்களுக்கு பாடசாலைக்கு வருவதில் சிரமம் என்பதால் எதிர்வரும் வெள்ளிக்கிழமை மத்திய , ஊவா மாகாணங்களின்பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குமாறு அனைத்து வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கும் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 01.11.2024 அன்று தமிழ் பாடசாலைகளுக்கு விடுமுறை அளிப்பதற்கு அங்கீகாரம் வழங்கப்படுவதாகவும், அன்றைய கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 09.11.2024 அன்று நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.