சம்பள உயர்வு குறித்து அறிவிக்க முன் நிதியமைச்சின் அனுமதி தேவையில்லை : பிரதமர் ஹரினி அரசமைப்பு குறித்து எங்கு கற்றார் ? – ரணில்
சம்பள உயர்வு குறித்து அறிவிக்க முன் நிதியமைச்சின் அனுமதி தேவையில்லை : பிரதமர் ஹரினி அரசமைப்பு குறித்து எங்கு கற்றார் ? - ரணில்
பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு இலங்கையின் அரசமைப்புபற்றி ஏதாவது தெரியுமா என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார்.
தீர்மானங்களை எடுப்பதற்கு அமைச்சரவைக்கு அரசஅதிகாரிகளின் அனுமதி அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
முன்னைய அமைச்சரவை உரிய நடைமுறைகளை பின்பற்றாமலே அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை அதிகரிக்க தீர்மானித்தது என பிரதமர் தெரிவித்துள்ளமை குறித்தே ரணில்விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை அதிகரிப்பதற்கு திறைசேரி நிதியமைச்சின் அதிகாரிகளின் சம்மதத்தை முன்னைய அரசாங்கம் பெறவில்லை என ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்,அமைச்சரவை இயங்குவதற்கு அவர்களின் அனுமதி அவசரம் என அவர் தெரிவிக்கின்றார் நீங்கள் எங்கிருந்து அரசமைப்பினை கற்றீர்கள் என ரணில்விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
அமைச்சரவையே நாட்டை ஆள்கின்றது அரசமைப்பின் எந்த இடத்திலும் அதிகாரிகள் பற்றி குறிப்பிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
அரசமைப்பு குறித்து அறியவேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள் நான் உதவுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.