பிரதான செய்திகள்

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை!

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை!

கைது செய்யப்பட்டு விளக்கமறியில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ(Johnston Fernando) பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

கடுமையான நிபந்தனைகளுடன் அவர் பிணையில் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

கொழும்பு – கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவருக்கு பிணை வழங்கப்பட்டுள்ளது.

ஜொன்ஸ்டன் பெர்னாண்டோ பிணையில் விடுதலை!

அண்மையில் ஹில்டன் ஹோட்டலில் இருந்து கண்டுபிடிக்கப்பட்ட BMW சொகுசு கார் தொடர்பான விசாரணைகளுக்கு அமைவாக அவர் கடந்த 23ஆம் திகதி குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.

அதனையடுத்து, இவரை இன்றுவரை(30) விளக்கமறியலில் வைக்குமாறு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், இன்று நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட அவருக்கு கடுமையான நிபந்தனைகளுடனான பிணை உத்தரவு வழங்கப்பட்டுள்ளது.

Back to top button