பிரதான செய்திகள்

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் – விஜித ஹேரத்

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் - விஜித ஹேரத்

புதிய நாடாளுமன்றம் தெரிவு செய்யப்பட்ட பின்னரே பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதா   என்பது குறித்து அரசாங்கம் இறுதி தீர்மானத்தை எடுக்கும் என அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டம் தொடர்ந்து நடைமுறையில் இருக்கும் - விஜித ஹேரத்

பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவது தொடர்பில் தற்போது ஆராயவில்லை அது தொடர்ந்தும் நடைமுறையில் இருக்கும் என தெரிவித்துள்ள அமைச்சர் திருத்தங்களை முன்மொழிந்து அவற்றை நாடாளுமன்றம் ஏற்றுக்கொண்டால் மாத்திரமே  பயங்கரவாத தடைச்சட்டத்தில் மாற்றங்களை மேற்கொள்ள முடியும் என குறிப்பிட்டுள்ளார்.

பயங்கரவாத தடைச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளவேண்டும் என்ற கருத்து பல காலமாக உள்ளது புதிய நாடாளுமன்றத்தின் அமர்வுகள் ஆரம்பமான பின்னரே இது குறித்து தீர்மானிப்போம் என விஜித ஹேரத் தெரிவித்துள்ளார்.

Back to top button