கிழக்கிலங்கைபிராந்திய செய்திகள்
காத்தான்குடி கடற்கரையில் கரை ஒதுங்கும் மீன்கள்!
காத்தான்குடி கடற்கரையில் கரை ஒதுங்கும் மீன்கள்!
காத்தான்குடி கடற்கரையில் திங்கட்கிழமை (28) இரவு முதல் பெருமளவிலான சிறிய ஊம்பல் மீன்கள் கரை ஒதுங்கி கொண்டிருக்கிறது.
கடந்த பத்து அல்லது பதினைந்து வருடங்களுக்கு பின்னர் சிறிய ஊம்பல் மீன்கள் கரை ஒதுங்குவதாக மீனவர்களும் பொது மக்களும் தெரிவிக்கின்றனர்.
காலநிலை மாற்றம் மற்றும் கடலில் ஏற்பட்டிருக்கின்ற மாற்றம் காரணமாக இந்த சிறிய ஊம்பல் மீன் கரை ஒதுங்குவதாகவும் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்