விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலி தகவல் வழங்கியவர் கைது!
விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலி தகவல் வழங்கியவர் கைது!
கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலித் தகவல் வழங்கிய சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் குருணாகல், வாரியப்பொல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
குருணாகல், வாரியப்பொல பிரதேசத்தில் வசிக்கும் 67 வயதுடைய நபரே கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் கடந்த 27 ஆம் திகதி அன்று கட்டுநாயக்க விமான நிலையத்திற்கும், விமான சேவை நிலையத்திற்கும் தொலைபேசியில் தொடர்பு கொண்டு கட்டுநாயக்க விமான நிலையத்தில் வெடிகுண்டு இருப்பதாக போலி தகவல் வழங்கியுள்ளார்.
இதனால், கட்டுநாயக்க விமான நிலையத்தில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இதனையடுத்து, இது தொடர்பில் பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.