பிரதான செய்திகள்பிராந்திய செய்திகள்

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரின் சடலம் மீட்பு

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரின் சடலம் மீட்பு

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் (Sri Lanka Podujana Peramuna ) கேகாலை பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர் தனது வீட்டில் கட்டிலில் கைகால்கள் கட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கேகாலை (Kegalle) – கொஸ்ஸின்ன பிரதேசத்தில் நேற்று (28) காலை இந்த சம்பவம் பதிவாகியுள்ளது.ஹெட்டிமுல்ல – புலுருப்ப பிரதேசத்தை சேர்ந்த 75 வயதுடைய கிருஷாந்த புலஸ்தி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்க்கப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், அவரது மனைவி வாயில் பிளாஸ்டர் ஒட்டப்பட்டு, வீட்டில் இருந்த அலமாரிகள் அனைத்தும் திறந்திருந்ததாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினரின் சடலம் 
மீட்பு

சந்தேகநபர்களின் தாக்குதலால் குறித்த பெண்ணும் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் காவல்துறையினரால் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவர்களது திருடப்பட்ட கார் பின்தெனிய காவல்துறை பிரிவில் விட்டுச் செல்லப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நீதவான் விசாரணையின் பின்னர் சடலம் கேகாலை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

தாக்குதலுக்கான காரணம் அல்லது சந்தேகநபர்கள் தொடர்பில் இதுவரை எவ்வித தகவலும் வெளியாகவில்லை.

சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கேகாலை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Back to top button