லவகுமாரின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை தடுக்கும் முயற்சியா ?
வன்முறையைத் தூண்டும் பொலிஸார்
லவகுமாரின் தேர்தல் பிரச்சார நடவடிக்கைகளை தடுக்கும் முயற்சியா ?
வன்முறையைத் தூண்டும் வகையில் நடந்து கொண்ட சந்திவெளி பொலிஸார்.
சுயேட்சை வேட்பாளரை தனது தேர்தல் பரப்புரைகளில் ஈடுபட முடியாத வகையில் அசௌகரியம் ஏற்படும் நிலைக்கு கொண்டு செல்லும் வகையில் செயற்பாடுகளை முன்னெடுத்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது
இம்முறை பாராளுமன்ற தேர்தலில் களமிறங்கும் சுயேட்சை குழு ஒன்றின் வேட்பாளராக வும் பிரபலமான தமிழ் தேசிய செயற்பாட்டாளரும் சிவில் சமூக செயற்பாட்டாளருமான வி. லவகுமார் என்பவரது தேர்தல் பிரச்சார நடவடிக்கைகள் தொடர்பில் ஆதரவு வழங்கும் நோக்குடன் அவரைக் காண வருகைத் தந்த ஆதாரங்களை அவர் தனக்கு சொந்தமாக இருந்த கிரான் யூனியன் வீதியில் உள்ள தனியார் காணியில் சந்தித்து கொண்டு இருக்கும் நிலையில்.
தீடீர் என்று அவ்விடத்திற்கு வருகைத் தந்த சந்திவெளி பொலிஸார் குறித்த காணியில் காணிகள் வழங்குவதாக தங்களுக்கு 119 அவசர பிரிவு மூலமாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது என்று கூறி அங்கே கூடி இருந்த மக்களை.
அச்சுறுத்தும் வகையில் செய்யப்பட்டதும் இன்றி பொலிஸ் வாகனத்தை அடித்து உடைக்க போகின்றீர்களா? என்ற வார்த்தை மூலம் மனதில் வன்முறை எண்ணத்தை தூண்டும் விதத்தில் செயற்பட்ட சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது…
இது குறித்து சந்திவெளி பொலிஸாரை தொடர்பு கொண்டு வினவிய போது குறித்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்று கூறி தொடர்பை துண்டித்தனர்.
எது எப்படி இருந்தாலும் குறித்த காணியில் ஒரு பகுதி கடந்த காலத்தில் தற்போதைய சுயேட்சை வேட்பாளர் ஊடாக இலவசமாக மக்களுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டவை தொடர்பில் பல்வேறு செய்திகளும் வெளியாகி உள்ளது.
தற்போது குறித்த காணியில் மக்கள் சந்திப்பு ஒன்றை நடத்தி வரும் நிலையில் அங்கு மேலும் காணிகள் வழங்க படுவதாக உத்தேசித்து யூகத்தின் அடிப்படையில் குறித்த முறைப்பாடு முன்வைக்க பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது..
எது எவ்வாறு இருந்தாலும் மக்களை வன்முறைக்கு தூண்டி நாசகார வேலையில் ஈடுபடும் வகையில் தூண்டுதல் மேற்கொண்ட பொலிஸார் குறித்து மக்கள் கடும் அதிர்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.