சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் போலீசார் மீது தாக்குதல்
கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட சுதந்திரதின கரிநாள் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
அத்தோடு, கிளிநொச்சி ஆர்ப்பாட்டத்தில் கைது செய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்க கோரி சார்லஸ் நிர்மலநாதன் உள்ளிட்ட தரப்பினர் கிளிநொச்சி பொலிஸ்நிலையத்திற்கு சென்று பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில், கைதுசெய்யப்பட்ட மாணவர்களை சட்டவைத்திய அதிகாரியின் முன் முன்னிலைப்படுத்தி விடுதலை செய்வதற்கான பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும், கைதுசெய்யப்பட்ட பல்கலைக்கழக மாணவர்களை விடுதலை செய்யும் வரை போராட்டம் தொடரும் என ஆர்பாட்டக்காரர்களால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
முதலாம் இணைப்பு
கிளிநொச்சியில் மேற்கொள்ளப்பட்ட சுதந்திரதின கரிநாள் போராட்டத்தில் கலந்து கொண்ட தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான சிறீதரன் மற்றும் சார்ள்ஸ் நிர்மலநாதன் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொலிஸாரின் அடாவடியை கண்டித்து எதிர்ப்பு தெரிவித்த நிலையிலேயே இவ்வாறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலங்கையின் 76ஆவது சுதந்திரதினத்தை தமிழர்களின் கரிநாளாக பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட 4 பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி – இரணைமடு சந்தியிலிருந்து யாழ். பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் சுதந்திர தின எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
சுதந்திர தின எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொள்ள 5 பேருக்கு பொலிஸாரால் தடை உத்தரவு பெறப்பட்டுள்ள நிலையில் இப்போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது
இந்நிலையில் போராட்டத்தை கட்டுப்படுத்த குறித்த பகுதியில் பெருமளவான பொலிஸார் கடமையில் அமர்த்தப்பட்டுள்ள நிலையில் ஆர்ப்பாட்டகாரர்களுக்கும் பொலிஸாருக்கும் இடையில் முறன்பாடு ஏற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.