பிராந்திய செய்திகள்மலையக செய்திகள்
தங்காலை – அம்பலாந்தோட்டை பகுதியில் விபத்து

தங்காலை – அம்பலாந்தோட்டை பிரதான வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஹுங்கம பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இன்று ஞாயிற்றக்கிழமை (04) காலை அம்பலாந்தோட்டையிலிருந்து தங்காலை நோக்கிச் சென்ற காரொன்றும், ஹுங்கமவில் இருந்து அம்பலாந்தோட்டை நோக்கிச் சென்ற வேனும் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர் .
கிவுல பஸ் நிலையத்திற்கு அருகில் பயணிகள் பஸ் ஒன்று நிறுத்தப்பட்டபபோது, பின்னால் வந்த வேன் பஸ்ஸை முந்திச் செல்ல முற்பட்ட போது, எதிரே வந்த காருடன் மோதி விபத்துக்குள்ளானதாக விசாரணையில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.