பிராந்திய செய்திகள்

பலத்த மழையினால் நீர்கொழும்பு நகரின் தாழ்நில பகுதிகள் பாதிப்பு!

பலத்த மழையினால் நீர்கொழும்பு நகரின் தாழ்நில பகுதிகள் பாதிப்பு!

நாட்டில் நேற்று ஞாயிற்றுக்கிழமை  (06) நள்ளிரவு முதல் பெய்து வரும் கடும் மழை காரணமாக  நீர்கொழும்பு நகரில் சில பிரதேசங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

கட்டுவை  பிரதேசத்தில் புவக்வத்த பகுதியில் சிறிய பாலத்தின் மேலாக வெள்ள நீர் பாய்வதன் காரணமாக பிரதேசத்தின் சில வீடுகள் நீரில் மூழ்கியுள்ளன.

இதன் காரணமாக அந்தப் பகுதியில் வாழும் மக்கள் உறவினர் நண்பர்களுடைய வீடுகளுக்கு சென்றுள்ளனர்.

பலத்த மழையினால் நீர்கொழும்பு நகரின் தாழ்நில பகுதிகள் பாதிப்பு

பெரியமுல்லை பிரதேசத்தில் தெனியாயவத்த , இறப்பர் வத்த, கோமஸ் வத்தை உட்பட பல தாழ்நில பிரதேசங்களில்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இதன் காரணமாக இப்பகுதியில் வாழும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் வெள்ள நீர் வீடுகளுக்குள் புகுந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Back to top button