மூன்று mpox தொற்றுள்ளவர்கள் பதிவு!
பாகிஸ்தானில் மேலும் மூன்று mpox தொற்றுள்ளவர்கள் கண்டறியப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, சவூதி அரேபியாவில் இருந்து பாகிஸ்தானின் கராச்சி விமான நிலையத்திற்கு வந்த மூன்று பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனையின் பின்னர் mpox அறிகுறிகள் தென்பட்டதாக கராச்சி விமான நிலைய வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பாதுகாப்பு நடவடிக்கையாக, விமான நிலைய அதிகாரிகள் குடிவரவு பகுதி மற்றும் நடைபாதைகளை கிருமி நீக்கம் செய்துள்ளனர் என கூறப்படுகின்றது.
மேலும் பல்வேறு செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள