பிராந்திய செய்திகள்வட இலங்கை
வடமாகாண ஆளுநர் நா.வேதநாயகனை சந்தித்துப் பேசிய இந்திய துணை தூதுவர் சாய் முரளி..
வடமாகாணத்தில் புதிதாக கடமைகளை பொறுப்பேற்ற ஆளுநர் நாகலிங்கம் வேதநாயகனை சந்தித்த இந்திய துணைத் தூதர் சாய் முரளி தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் சாய் முரளி வடமாகாணத்தின் ஆளுநரை ஆளுநர் செயலகத்தில் வெள்ளிக்கிழமை (27) சந்தித்து கலந்துரையாடினார்.
இச்சந்திப்பின்போது, வடக்கில் இந்தியாவிற்கும் இலங்கையின் வடக்கு மாகாணத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.