பிராந்திய செய்திகள்
கொழும்பில் வீடொன்றிற்குள் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கபட்ட பெண்!
மிரிஹான, பங்கிரிவத்த, சந்தனம்பிட்டிய பகுதியில் உள்ள வீடொன்றிற்குள் பெண் ஒருவர் வெட்டப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குறித்த வீட்டில் வசித்து வந்த 35 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த குடியிருப்பில் சாரதியாக முன்னர் கடமையாற்றிய ஒருவரே இக்கொலையை மேற்கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
கொலைச் சம்பவம் தொடர்பிலான நீதவான் விசாரணை கங்கொடவில நீதவானினால் மேற்கொள்ளப்படவுள்ளது.
சந்தேக நபரை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை மிரிஹான பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Lankafire