பிராந்திய செய்திகள்

இலங்கையில் வாகன இறக்குமதி தடை நீக்கம்!

எதிர்வரும் 2025 ஆண்டு, பெப்ரவரி மாதத்துக்குள் வாகன இறக்குமதி தொடர்பான அனைத்துத் தடைகளையும், மற்றும் கட்டுப்பாடுகளையும் நீக்க அமைச்சரவை முடிவு செய்துள்ளதாக வெளியுறவுத்துறை அமைச்சர் அலி சப்ரி அறிவித்துள்ளார்.

கையிருப்பில் உள்ள அந்நிய செலாவணியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்படுவதாலும், ரூபாவின் பெறுமதி உயர்வடைந்துள்ளமையினாலுமே இந்த தீர்மானத்தை தாம் எடுத்ததாக அலி சப்ரி மேலும் தெரிவித்துள்ளார்.


Lankafire

Back to top button