பிராந்திய செய்திகள்

இலங்கையில் பெண் ஒருவடன் காணாமல்போன முச்சக்கரவண்டி சாரதி! பரபரப்பு சம்பவம்

[ad_1]

பாணந்துறை பதுவில பகுதியில் மர்மமான முறையில் காணாமல் போன முச்சக்கரவண்டி சாரதி ஒருவரை தேடி விசேட நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

கடந்த 40 நாட்களுக்கு முன்னர் பெண் ஒருவருடன் வாடகைக்காக பயணித்த முச்சக்கரவண்டி சாரதியே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

பிரபல போதைப்பொருள் கடத்தல்காரரும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியுமான பாணந்துறை சாலிந்து என்பவர் வௌிநாடு சென்ற நிலையில் அவருக்கு சொந்தமான ஒன்றைத் திருடிய சம்பவம் தொடர்பில் இந்த முச்சக்கரவண்டி சாரதி மற்றும் வந்துரமுல்ல பகுதியை சேர்ந்த மற்றுமொரு நபரையும் கடத்தி சென்று தாக்கிய சம்பவம் கடந்த 2021 ஆம் ஆண்டில் பதிவாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதன்போது மற்றொரு நபர் உயிரிழந்ததுடன், காணாமல் போன முச்சக்கரவண்டி சாரதியே கொலையை நேரில் கண்ட ஒரே சாட்சி என விசாரணையில் தெரியவந்துள்ளது.

[ad_2]
Lankafire

Back to top button