Monday, July 15, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local Newsஅதிக ஹெரோயின் பாவனை - யாழில் இளைஞன் மரணம்.!!

அதிக ஹெரோயின் பாவனை – யாழில் இளைஞன் மரணம்.!!

யாழ்ப்பாணத்தில் அதிக ஹெரோயின் பாவனை காரணமாக இளைஞன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் இன்றைய தினம் (31-01-2024) இடம்பெற்றுள்ளது.

மேலும் குறித்த சம்பவத்தில் இருபாலை தெற்கு பகுதியைச் சேர்ந்த 29 வயதான கணேசன் நிஷாந் என்பவரே உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குறித்த நபர் நேற்றிரவு உணவருந்தி விட்டு தூக்கத்திற்கு சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டில் உள்ளவர்கள் இன்று அதிகாலை 4 மணியளவில் அவரை அவதானித்தவேளை அவர் அசைவற்று காணப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் காலை 5 மணியளவில் அவரை யாழ்ப்பாண போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்றவேளை அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.

அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார்.

உடற்கூற்று பரிசோதனைகளின்போது, இளைஞன் அதிக ஹெரோயின் பாவனை காரணமாக உயிரிழந்தமை தெரியவந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்