பிராந்திய செய்திகள்

இளைஞன் ஒருவரின் திருட்டு வேலை… யாழ்ப்பாண மக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்

[ad_1]

யாழ்.தென்மராட்சி பகுதிகளில் உள்ள வீடுகளில் திருட்டில் ஈடுபட்டு வரும்  சந்தேகநபர் தொடர்பில் விபரங்கள் தெரிந்தால் தகவல் வழங்குமாறு பொலிஸார் மக்களை கோரியுள்ளனர்.

மேலும், குறித்த சந்தேகநபர் திருட்டில் ஈடுபடுவது தொடர்பிலான  சிசிரிவி  காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

தென்மராட்சி பகுதிகளில் அண்மைக்காலமாக வீட்டில் உள்ளவர்கள் வெளியில் செல்லும் நேரங்களில் வீடுகளுக்கு புகுந்த திருடும் சம்பவங்கள் அதிகரித்துள்ள நிலையில்,

நேற்றைய தினம் வியாழக்கிழமை சாவகச்சேரி பகுதியில் உள்ள வீடொன்றில் ஆட்கள் அற்ற நேரம் புகுந்த நபர் ஒருவர் வீட்டில் இருந்த பெருந்தொகை பணம் மற்றும் பெறுமதியான பொருட்களை திருடி சென்றுள்ளார்.

குறித்த சம்பவம் வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகியுள்ளது.

வீட்டினுள் நுழையும் போது ஒரு சேர்ட்டும், திருடிய பின்னர் வீட்டில் இருந்து வெளியேறும் போது வேறு ஒரு சேர்ட்டும் அணிந்து சந்தேகநபர் தப்பி சென்றமை பதிவாகியுள்ளது.

குறித்த நபர் தொடர்பிலான விபரங்கள் அறிந்தவர்கள், சாவகச்சேரி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் 0718591337 எனும் தொலைபேசி இலக்கம் ஊடாகவோ  அருகில் உள்ள பொலிஸ் நிலையத்திற்கோ அறிவிக்குமாறு பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

[ad_2]
Lankafire

Back to top button