பிராந்திய செய்திகள்

பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழப்பு!

[ad_1]

வெள்ளவத்தை கடற்பகுதியில் ஏற்பாடு செய்யப்பட்ட பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போது நீரில் மூழ்கி இளைஞன் ஒருவர் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்றிரவு (29-08-2024) இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவத்தில் தொழில்நுட்பவியலாளரான கிருலப்பனை சித்தார்த்த வீதியில் வசித்த 22 வயதான பாஸ்கரன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

15 பேர் கொண்ட நண்பர்கள் குழுவினர் ஏற்பாடு செய்திருந்த இரவு பிறந்தநாள் கொண்டாட்டத்தின்போதே இந்த துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இச்சம்பவத்தில் நீரில் மூழ்கிய பிறந்தநாள் கொண்டாடிய இளைஞனைக் காப்பாற்றச் சென்ற மற்றுமொரு இளைஞனே நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பிறந்தநாள் கொண்டாடிய இளைஞர் உள்ளிட்ட சிலர் கடலில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தனர்.

அதன்போது நீரில் மூழ்கிய இளைஞனை காப்பாற்ற சென்ற இளைஞர்கள் மத்தியில் இந்த இளைஞன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

[ad_2]
Lankafire

Back to top button