150,000 ரூபா இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் இலஞ்சம் பெற்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளார்.
உஸ்வெடகெய்யாவ பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் படி யுக்திய நடவடிக்கையின் போது முறைப்பாட்டாளரின் வீட்டை சோதனைக்கு உட்படுத்தாமல் இருப்பதற்காக இவ்வாறு இலஞ்சம் கோரப்பட்டுள்ளது.
மஹபாகே பொலிஸின் போக்குவரத்து பிரிவின் பொலிஸ் சார்ஜன் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
நேற்று (02) பிற்பகல் 2.42 மணியளவில் வத்தளை, மஹபாகே நீதிமன்ற வாகன தரிப்பிடத்திற்கு முன்பாக உள்ள வீதியில், வைத்து இவர் கைது செய்யப்பட்டதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
, இலஞ்சம் பெற்ற பொலிஸ் சார்ஜன்ட் ஒருவர் கைது!