ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

அம்பாறையில் ஐஸ் போதை வியாபாரி மற்றும் பெண் ஒருவர் கைது !


அம்பாறை, இறக்காமம் பிரதேசத்தில் 6 கிராம் 300 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருளுடன் வியாபாரி ஒருவர் மற்றும் பெண் ஒருவர் செவ்வாய்க்கிழமை (30) இரவு 8 மணியளவில் கைது செய்யப்பட்டதாக இறக்காமம் பொலிஸார் தெரிவித்தனர்.

அம்பாறை விசேட புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் செவ்வாய்க்கிழமை (30) குறித்த போதை பொருள் வியாபாரியின் வீட்டை சுற்றி வளைத்து சோதனையிட்டபோது வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 25 வயதுடைய இளைஞன் ஒருவரை 6 கிராம் 300 மில்லி கிராம் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர்

அதேவேளை 43 வயதுடைய பெண் ஒருவர் ஐஸ் போதைப் பொருளுடன் கைது செய்தனர். இந்த இரு வெவ்வேறு சம்பவங்களில் கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்

, அம்பாறையில் ஐஸ் போதை வியாபாரி மற்றும் பெண் ஒருவர் கைது !

Back to top button