ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

மாணவர்கள்‌ சமூகத்திற்கு ஏற்ப இசைவாக்கம்‌ அடைய வேண்டும்‌.

மாணவர்கள்‌ சமூகத்திற்கு ஏற்ப இசைவாக்கம்‌ அடைய வேண்டும்‌.

இன்றைய காலப்பகுதியில்‌ கல்வி என்பது இன்றியமையாத ஒரு விடயமாக காணப்படுகின்றது. கல்வியைப்‌ பெற்றுக்‌ கொள்ளும்‌ அனைவரும்‌ மாணவர்கள்‌ ஆவர்‌. கல்வியை வழங்கும்‌ பல நிறுவனங்களை நாம்‌ சமூகத்தில்‌ காணக்கூடியதாக உள்ளது. இவை அரசு சார்பானதாகவும்‌, அரசு சார்பற்றதாகவும்‌ காணப்படுகின்றது. பாடசாலைகள்‌, பல்கலைக்கழகங்கள்‌ அவற்றுள்‌ முதன்மையானது ஆகும்‌. தேசிய கல்வி இலக்குகளை அடைந்து கொள்ளும்‌ வகையில்‌ இவற்றின்‌ சகல செயற்பாடுகளும்‌ திட்டமிட்டு நடைமுறைப்படுத்தப்படுகின்றன.

இவை பாரிய சமூக அமைப்புக்களில்‌ ஒன்றாக காணப்படுகின்றது. இவ்‌ சமூகத்தில்‌ சிறப்பான செயற்பாடுகளை மேற்கொண்டு எதிர்பார்க்கும்‌ இலக்குகளை அடைந்து கொள்வதற்கு சமூகமயமாக்கல்‌ என்பது இன்றியமையாத ஒன்றாகும்‌. சமூகமயமாக்கல்‌ என்பது ஒரு நபர்‌ தனது சமூகச்‌ சூழலில்‌ உள்ள நிலைமைக்கு ஏற்ப இசைவாக்கம்‌ அடைவது ஆகும்‌.

இவ்‌ சமூகமயமாக்கலானது மாணவர்களுக்கு பல காரணங்களின்‌ அடிப்படையில்‌ இன்றியமையாததாக காணப்படுகின்றது. மாணவப்‌ பருவமானது வாழ்க்கை பற்றிய பல விடயங்களை எமக்கு அனுபவரீதியாக கற்றுத்‌ தருவதாக அமைகின்றது. வாழ்க்கையில்‌ நமக்கு அவசியமான பல வாழ்க்கைத்‌ திறன்களை வளர்ப்பதாக அமைகின்றது. ஒரு சிறந்த நற்பிரஜையாக வாழ்வதற்கு அவசியமான பல திறன்களை இக்காலத்தில்‌ சமூகமயமாக்கலின்‌ ஊடாக பெற்றுக்‌ கொள்ள முடிகின்றது.

சமூகத்‌ திறன்களை வளர்ப்பதில்‌ சமூகமயமாக்கலுக்கு பாரிய பங்களிப்பு உள்ளது. சமூகத்துக்கு பொருத்தமான வகையில்‌ தயார்படுத்துவததாக இவை அமைகின்றது. சமூகத்‌ திறன்கள்‌ வாழ்க்கைக்கு அவசியமாகின்ற வாழ்க்கைத்‌ திறன்களாகவும்‌ கொள்ளப்படுகின்றன.

பிரச்சினை தீர்த்தல்‌ , விமர்சன சிந்தனை , சிறந்த தொடர்புகளை உருவாக்கிக்‌ கொள்ளல்‌,உறவுகளை பலப்படுத்திக்‌ கொள்ளுதல்‌, ஆளுமை விருத்தி, நேர முகாமைத்துவம்‌, தீர்மானம்‌ எடுத்தல்‌, தமது கருத்துக்களை சிறந்த வகையில்‌ முன்வைத்தலும்‌ , ஏனையவரின்‌ கருத்துகளுக்கு செவிசாய்த்தலும்‌, ஒத்துழைப்பு, பகிர்தல்‌ என பலவற்றை கூறிக்‌ கொண்டே செல்லலாம்‌. இவை சமூகமயமாக்கலின்‌ மூலம்‌ நமக்கு கிடைக்க பெறுகின்றன. நாம்‌ கற்கும்‌ கல்வி எமது வாழ்நாள்‌ முழுவதும்‌ நமக்கு தொடர்ந்து வந்து பயனளிப்பதை போல மாணவப்‌ பருவத்தில்‌ நாம்‌ கற்றுக்‌ கொள்கின்ற இத்தகைய வாழ்க்கைத்‌ திறன்களும்‌ எமது வாழ்நாள்‌ முழுவதும்‌ எமக்கு நன்மை அளிப்பதாக அமைகின்றன. எனவே இக்காலத்தில்‌ சிறந்த சமூகமயமாக்கல்‌ செயற்பாடானது அவசியமான ஒன்றாகும்‌.

21 ஆம்‌ நூற்றாண்டுக்கான 46 திறன்கள்‌ முதன்மைப்படுத்தப்படுகின்றது. விமர்சன சிந்தனை,
தொடர்பு.ஒத்துழைத்தல்‌, படைப்பாற்றல்‌ போன்றனவே அவை ஆகும்‌. விமர்சன சிந்தனையானது அறிவுப்பூர்வமான, சுதந்திரமான சிந்தனையை குறிக்கின்றது. தொடர்பு திறன்கள்‌ என்பது தற்காலத்தில்‌ இன்றியமையாத ஒன்றாகும்‌. ஒத்துழைப்பானது தாம்‌ அடைய நினைக்கின்ற நோக்கத்தை அடைவதற்காக இணைந்து செயல்படுவதை குறிக்கின்றது. இவை மேலும்‌ பல திறன்களுக்கு
அடிப்படையாகவும்‌ அமைகின்றது. படைப்பாற்றல்‌ என்பது அனைவரிடம்‌ காணப்படும்‌ ஒன்றாகும்‌.

படைப்பாற்றல்‌ ஆக்கபூர்வ தன்மையை எதிர்பார்த்து நிற்கின்றது. நம்மை நாமே சரியாக அறிந்து கொள்வதன்‌ மூலம்‌ படைப்பாற்றல்‌ திறனை அடைந்து கொள்ள முடியும்‌. தற்காலத்தில்‌ வேண்டப்படும்‌ இவ்‌ 40 திறன்கள்‌ சமூகமயமாக்கலுடன்‌ இணைந்தவையாக காணப்படூகின்றன.

சிறந்த சமூகமயமாக்கல்‌ செயல்பாடுகளை பின்பற்றுகின்ற போது இவ்‌ திறன்களின்‌ வளர்ச்சியானது அதன்‌ மூலம்‌ இடம்பெறுகின்றது. அந்த வகையில்‌ மாணவர்களுக்கு சமூகமயமாக்கலானது அவசியமானதாக காணப்படூகின்றது. இவற்றை சிறந்த வகையில்‌ அடைந்து கொள்ள மாணவர்கள்‌ சமூகத்திற்கு ஏற்ப இசைவாக்கம்‌ அடைய வேண்டும்‌.

மாணவப்‌ பருவத்தில்‌ பல விடயங்களின்‌ நிமித்தம்‌ பல மனவெழுச்சிகள்‌ தோற்றம்‌ பெறுகின்றன. இவை சாதகமானதாகவும்‌ பாதகமானதாகவும்‌ அமைகின்றன. சாதகமான மனவெழுச்சிகளை
சிறந்த முறையில்‌ வளர்த்துக்‌ கொள்வதற்கும்‌ பாதகமான மனவெழுச்சிகளை முறையான வகையில்‌ கையாளுவதும்‌ அவசியம்‌ ஆகும்‌. சிறந்த சமூகமயமாக்கலானது மனவெழுச்சிகளை
சரியான வகையில்‌ கையாளும்‌ ஒருவரை உருவாக்குகின்றது.

சரியான வகையில்‌ மனவழுச்சிகளை கையாளப்‌ பழக வேண்டியது அவசியமாகும்‌. அப்போதுதான்‌ தனிநபரதும்‌ சமூகத்தினதும்‌ அமைதி , சீரான செயற்பாடுகளுக்கு வழி ஏற்படும்‌. மனவெழுச்சிகளை கட்டுப்படுத்த முடியாத ஒருவரால்‌ ஏனையவர்களதும்‌ சமூகத்தினதும்‌ அமைதி மற்றும்‌ செயற்பாடுகள்‌ பாதிக்கப்படும்‌. மாணவர்களாக இருக்கின்ற போது இவற்றை பழகுவதன்‌ மூலம்‌ எதிர்காலத்திற்கும்‌’ அவை பக்கபலமாக அமைகின்றது. சிறப்பான சமூகமயமாக்கல்‌
செயற்பாடுகள்‌ மூலம்‌ ஒருவரிடத்தில்‌ பல சாதகமான மனவெழுச்சிகள்‌ தோன்றுவதோடூ பாதகமான மனவெழுச்சிகளை முறையாக கையாளவும்‌ முடிகின்றது.

மாணவர்‌ பருவத்தில்‌ பல நடத்தைசார்‌ பிரச்சினைகள்‌ உருவாகின்றன. கல்வி மீதான மனநிலை, சமூகம்‌ பற்றிய எண்ணங்கள்‌ , எதிர்காலம்‌ பற்றிய எண்ணங்கள்‌ போன்ற பலவற்றை கூறிக்‌ கொண்டே செல்லலாம்‌. இவற்றின்‌ நிமித்தம்‌ பயம்‌,குழப்பம்‌,பதற்றம்‌, தெளிவின்மை போன்ற பல விடயங்கள்‌ மாணவர்‌ மத்தியில்‌ உருவாகின்றன. இந்நிலை தொடருமாயின்‌ மாணவர்களால்‌ தமது செயற்பாடுகளை சிறந்த வகையில்‌ முன்னெடுக்க முடியாது. இவற்றுக்கான தீர்வு சமூகமயமாக்கலின்‌ ஊடாகவே மாணவர்களுக்கு கிடைக்கப்பெறுகின்றன. சிறந்த
சமூகமயமாக்கலை உடைய ஒருவரிடம்‌ நம்பிக்கை மிகுந்த உறுதியான உறவுகளை காணப்படூவர்‌.

இவ்வாறான சந்தர்ப்பத்தில்‌ தீர்வை வழங்குபவர்களாக அத்தகைய உறவுகள்‌ காணப்பவர்‌. வழிகாட்டுதல்‌ , அறிவுரை கூறுதல்‌, உதவிகளை வழங்குதல்‌, முயற்சிக்கான உந்துதல்களை வழங்குதல்‌ போன்ற பலவற்றை அவர்கள்‌ மேற்கொள்வர்‌. இதன்‌ மூலம்‌ மன
உறுதி,அமைதி, நம்பிக்கை, தெளிவு போன்றவை மாணவர்கள்‌ மத்தியில்‌ தோற்றம்‌ பெறும்‌. இவை மாணவர்கள்‌ தமது இலக்குகளை அடைந்து கொள்வதற்கு பாதை அமைப்பதாக அமைகின்றன.

மாணவர்‌ பருவத்தில்‌ பல காரணங்களால்‌ அழுத்தங்கள்‌ அதிகரிக்கின்றது. மாணவர்கள்‌ மத்தியில்‌ தற்கொலைகள்‌ அதிகரிப்பதற்கு இது பிரதான காரணமாக அமைகின்றது.
அண்மைக்‌ காலங்களில்‌ பாடசாலை மாணவர்கள்‌, பல்கலைக்கழக மாணவர்கள்‌ தற்கொலை செய்து கொண்ட பல செய்திகளை நாம்‌ அறியக்கூடியதாக உள்ளது. இதற்கு பிரதான காரணமாக அழுத்தங்கள்‌ அமைகின்றன. சிறந்த வகையில்‌ சமூகமயப்படூத்தலுக்கு உட்படும்‌ ஒரு மாணவன்‌ தனது சமூக உறவுகளிடம்‌ தமது அழுத்தங்கள்‌, பிரச்சினைகள்‌ தொடர்பாகவும்‌
கலந்துரையாடி சிறந்த தீர்வினை பெற்று அழுத்தத்தில்‌ இருந்து விடுபட்டு சிறந்த ஒரு வாழ்க்கையை உருவாக்கிக்‌ கொள்ள முடியும்‌.

மேலும்‌ இவ்‌ அழுத்த மனநிலையிலிருந்து சிறந்த மனநிலைக்கு வருவதற்கும்‌ முடிகின்றது. அவ்வாறான நம்பிக்கையான சமூக உறவுகளை பேணாத ஒரு மாணவனால்‌ தன்னுடைய அழுத்தங்கள்‌ தொடர்பில்‌. பிரச்சினைகள்‌ தொடர்பில்‌ கலந்துரையாட முடியாது. இந்நிலையானது மேலும்‌ அழுத்தத்துக்கு உள்ளாகி தற்கொலை வரை கொண்டு செல்கின்றது. எனவே மாணவப்‌ பருவத்தில்‌ சிறந்த சமூகமயமாக்கலானது இன்றியமையாத ஒன்றாக காணப்படுகின்றது.

மாணவர்களின்‌ அறிவு, திறன்‌, மனப்பாங்கு விருத்திக்கு சமூகமயமாக்கலானது பாரிய பங்களிப்பு செய்கின்றது. கல்வி செயற்பாடுகள்‌ அறிவு, திறன்‌, மனப்பாங்கு வளர்ப்பதையே அடிப்படையாகக்‌ கொண்டுள்ளது. சமூகமயமாக்கலின்‌ ஊடாக இவை சாத்தியமாகின்றன. சமூகத்‌ தொடர்புகள்‌ அதிகரிக்கின்ற போது பல விடயங்களை அறிவு ரீதியாக அறிந்து கொள்ள
முடிகின்றது. தாம்‌ அறிந்து கொள்ளும்‌ விடயங்களைக்‌ கொண்டு தமது திறன்களை மேம்படுத்தவும்‌, திறன்களை வெளிப்படுத்த வாய்ப்புகள்‌ சமூகத்தின்‌ ஊடாக கிடைக்கப்‌ பெறுகின்றன.

மேலும்‌ இதன்‌ போது நமது மனப்பாங்கிலும்‌ மாற்றங்கள்‌ உருவாகின்றன. அறிவானது அறிவாக மாத்திரம்‌ காணப்படுகின்ற போது அது பயனளிக்காது. நடைமுறை தன்மைக்கு வருகின்றபோது அதன்‌ முழுப்‌ பயனையும்‌ பெற்றுக்‌ கொள்ள முடியும்‌. அதற்கான அடித்தளத்தை மாணவர்களுக்கு வழங்குவதனால்‌ சமூகமயமாக்கலானது அவசியமானதாக காணப்படுகிறது.

சமூகமயமாக்கலின்‌ மூலம்‌ மாணவனால்‌ சமூகத்தின்‌ தற்போதைய நிலையை சரியான வகையில்‌ விளங்கிக்‌ கொள்ள முடிவதுடன்‌ சமூகத்தின்‌ எதிர்காலப்‌ போக்கினையும்‌ ஊகித்துக்‌ கொள்ள முடிகின்றது. எதிர்கால சமூகத்தில்‌ வளர்த்துக்‌ கொள்ளப்பட வேண்டிய திறன்கள்‌, சமூகத்தில்‌ காணப்படுகின்ற வாய்ப்புகள்‌, தொழில்‌ நிலைமைகள்‌, சமூகத்தில்‌ எதிர்காலத்தில்‌ வேண்டப்படுகின்ற முக்கிய கற்கை நெறிகள்‌ போன்ற எதிர்கால சமூகத்தின்‌ பல போக்குகளை அறிந்து கொள்ள முடிகிறது. இதன்‌ மூலம்‌ சமூகத்தின்‌ எதிர்காலத்‌ தேவைகளை அறிந்து அதற்கேற்ற வகையில்‌ தன்னை தயார்படுத்திக்கொள்ள ஒரு மாணவனுக்கு வாய்ப்பாக அமைகின்றது.

சமூகமயமாக்கலின்‌ ஊடாகவே மாணவர்கள்‌ சமூகத்தின்‌ பல்வகைமையை அறிந்து கொள்ள முடிகின்றது. சமூகம்‌ பாரிய அமைப்பாகும்‌ அதன்‌ பல்வகைமையை அறிந்து செயல்படுகின்ற
போதே சமூகத்தில்‌ சிறந்த செயற்பாடுகளை வெளிப்படுத்த முடியும்‌. இப்பல்வகைமையை சிறந்த வகையில்‌ புரிந்து கொள்வதற்கும்‌ பல்வகைமையை ஏற்று நடப்பதற்குமான தன்மையை சமூகமயமாக்கலின்‌ ஊடாக பெற்றுக்கொள்ள முடியும்‌.

இவற்றின்‌ அடிப்படையில்‌ நோக்குகின்ற போது மாணவர்களுக்கு சமூகமயமாக்கலானது மிகவும்‌ அவசியமானது என்பது தெளிவாக புலப்படுகின்றது. இவற்றை சிறந்த வகையில்‌ அடைந்து கொள்ள
மாணவர்கள்‌ சமூகத்திற்கு ஏற்ப இசைவாக்கம்‌ அடையவேண்டூம்‌.சமூகமயமாக்கல்‌ முகவர்களில்‌ பாடசாலை போன்ற கல்வி நிறுவனங்கள்‌ முதன்மையானதாக காணப்படூகின்றது என்பதும்‌ இங்கு குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்‌. சிறந்த சமூகமயமாக்கலானது மாணவர்களுக்கு
நிகழ்காலத்தை சரியான வகையில்‌ புரிந்து கொண்டூ எதிர்கால செயற்பாடுகளுக்கு பொருத்தமான வகையில்‌ தம்மை தயார்படுத்திக்‌ கொள்வதற்கான சந்தர்ப்பத்தை
உருவாக்குகின்றது.

கல்வியின்‌ தேசிய இலக்குகளை அடைந்து கொள்வதற்கு
மாணவர்களிடத்து சமூகமயமாக்கலானது பிரதானமான விடயமாகின்றது. மாணவர்களிடத்தில்‌ சிறந்த சமூகமயமாக்கலை தோற்றுவிப்பதில்‌ அனைவரும்‌ பொறுப்புணர்வுடன்‌ செயல்படூவதும்‌
அவசியம்‌ ஆகும்‌.

குமாரகுரு மோனிஷா

4ஆம்‌ வருட கல்வியியல்‌ சிறப்பு கற்கை மாணவி,

கல்வி, பிள்ளை நலத்துறை.

கிழக்குப்‌ பல்கலைக்கழகம்‌.

, மாணவர்கள்‌ சமூகத்திற்கு ஏற்ப இசைவாக்கம்‌ அடைய வேண்டும்‌.

Back to top button