பிராந்திய செய்திகள்வட இலங்கை

வவுனியாவில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு

வவுனியாவில் கிணற்றிலிருந்து பெண்ணின் சடலம் மீட்பு வவுனியா – குருமன்காடு கோவில் வீதி பகுதியில் கிணற்றிலிருந்து இளம் பெண்ணின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பெண்ணின் சடலமானது இன்று (30.01.2024) மீட்க்கப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது 29வயதுடைய ஜெனிற்றா சயந்தன் என்ற பெண்ணே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

வவுனியா குருமன்காடு

பொலிஸ் விசாரணை

குறித்த பெண்ணை காணவில்லை என வீட்டார் தேடிய போது வீட்டிலுள்ள கிணற்றில் சடலமாக காணப்படுள்ளார்.

இதனையடுத்து வவுனியா பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் உயிரிழந்த பெண்ணின் சடலத்தை மீட்டுள்ளனர்.

குறித்த மரணம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன் தடவியல் பிரிவினரின் உதவியினையும் பொலிஸார் நாடியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Back to top button