ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

சிடாஸ் அமைப்பின் அனுசரனையுடன் மட்/மமே/இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலய மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் ஆரம்பம்

(சித்தா)

மட்/மமே/இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலயத்தில் க.பொ.த.சாதாரண தரம் கற்கும் மாணவர்களின் அடைவு மட்டத்தை மேம்படுத்தும் பொருட்டு தற்போது தரம் 10 இல் கல்வி கற்கும் 38 மாணவர்களுக்கு விஞ்ஞானம், கணிதம், தமிழ் ஆகிய பாடங்களுக்கான மேலதிக வகுப்புகளின் ஆரம்ப நிகழ்வு இன்று 2024.07.23 செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.30 மணியளவில் பாடசாலையின் அதிபர் எஸ்.கிரிசாந்தன் தலைமையில் வித்தியாலய மண்டபத்தில் இடம்பெற்றது. 

இந்நிகழ்வில் மட்டக்களப்பு மேற்கு வலயத்திற்குபட்ட ஏறாவூர் பற்று பிரதேசத்திற்குப் பொறுப்பான கோட்டக் கல்விப் பணிப்பாளர் ரி.யசோதரன், முன்பிள்ளைப் பருவ பராமரிப்பும் அபிவிருத்திக்கும் பொறுப்பான உதவிக் கல்விப் பணிப்பாளர் சுப்பிரமணியம் கணேஸ், மேலதிக வகுப்பு ஆசிரியர்களான வளவாளர் வீ.றொசாந்த், ஐ.சதுத்திகா மற்றும் பெற்றோர்கள், மாணவர்கள் ஆகியோருடன் சிடாஸ் மட்டக்களப்பு அமைப்பின் அங்கத்தவர்களான முத்துராஜா புவிராஜா, கணபதிப்பிள்ளை லிங்கராஜா, எஸ்.கணேஷ் ஆகியோரும் கலந்துகொண்டு நிகழ்வை சிறப்பித்திருந்தனர்.

இச்செயற்றிட்டத்திற்கான அனுசரனையை சிடாஸ் கனடா அமைப்பு வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

, சிடாஸ் அமைப்பின் அனுசரனையுடன் மட்/மமே/இலுப்படிச்சேனை அம்பாள் வித்தியாலய மாணவர்களுக்கான மேலதிக வகுப்புகள் ஆரம்பம்

Back to top button