ஹோட்டலில் இடம்பெற்ற கசிப்பு கசிப்பு வியாபாரம் :08 கசிப்புப் போத்தல்களுடன் இருவர் கைது !

கண்டி மத்திய சந்தையிலுள்ள ஹோட்டல் ஒன்றில் நீண்ட காலமாக மேற்கொள்ளப்பட்டு வந்த கசிப்பு மோசடி தொடர்பான விபரங்களை கண்டி பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் இன்று (22) கண்டுபிடித்துள்ளனர்.
குறித்த சுற்றிவளைப்பின் போது 08 கசிப்புப் போத்தல்களுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஹோட்டலின் உரிமையாளரும் ஊழியர் ஒருவரும் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதுடன், குறித்த ஊழியர் இராணுவத்தின் விசேட அதிரடிப்படையின் சேவையில் இருந்து ஓய்வு பெற்றவர் என பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.
சந்தேக நபர்கள் யாருக்கும் சந்தேகம் வராத வகையில் குளிர்பான போத்தல்களில் கசிப்புவை நீண்ட காலமாக இவ்வாறு விற்பனை செய்து வந்துள்ளமை தெரியவந்துள்ளது.
மேலும், வாங்குபவர் ஒருவர் ஹோட்டலுக்கு வரும்போது, தேனீர் கோப்பையில் கசிப்புவை வழங்கியுள்ளதாகவும், அந்த இடத்தில் தினமும் சுமார் 10 போத்தல் கசிப்பு விற்கப்படுவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
இதேவேளை, கண்டி மத்திய சந்தைக்கு வரும் லொறிகளுக்கு பொருட்களை ஏற்றி இறக்கும் நாட்டாமிகள் அதிகாலை 5.00 மணியளவில் இந்த இடத்தில் இருந்து கசிப்புவை அருந்திச் செல்வதாவும் தெரியவந்துள்ளது.
1200 ரூபாவுக்கு ஒரு போத்தல் கசிப்புவை பெற்று அதனை தேநீர் கோப்பைகளில் விற்பனை செய்வதன் ஊடாக ஒரு போத்தலில் 2000 ரூபா வரை வருமானம் ஈட்டுவதாகவும், நாளொன்றுக்கு 10 போத்தல்கள் இவ்வாறு விற்பனை செய்யப்படுவதன் ஊடாக 8000 ரூபா வரை மேலதிக வருமானத்தை ஹோட்டல் உரிமையாளர் பெறுவதாகவும் தெரியவந்துள்ளது.
கண்டி பொலிஸுக்கு முன்னால் அமைந்துள்ள கண்டி மத்திய சந்தையினுள் நீண்ட காலமாக இந்த கசிப்பு வியாபாரம் இரகசியமாக மேற்கொள்ளப்பட்டு வந்துள்ள நிலையில், இது தொடர்பல் கண்டி மாநகர சபையின் ஊடாகவும் விசாரணை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
, ஹோட்டலில் இடம்பெற்ற கசிப்பு கசிப்பு வியாபாரம் :08 கசிப்புப் போத்தல்களுடன் இருவர் கைது !