பச்சை குத்தும் நிலைய உரிமையாளரிடம் இரகசிய வாக்குமூலம் !

கிளப் வசந்த என்ற சுரேந்திர வசந்த பெரேராவின் படுகொலை தொடர்பில் அதுரிகிரிய பச்சை குத்தும் நிலையத்தின் உரிமையாளர் கடுவெல நீதவான் முன்னிலையில் இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கியுள்ளார்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர், சந்தேகநபர் துலான் சஞ்சய் சார்பில் ஆஜரான சட்டத்தரணி நுவன் ஜயவர்தன, தனது கட்சிக்காரருக்காக இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தார்.
இதனை அடுத்து நீதவான் சனிமா விஜேபண்டார, சந்தேகநபரிடம் இரகசிய வாக்குமூலம் ஒன்றை வழங்கும் போது நீதிமன்றில் உள்ள நிபந்தனைகள் குறித்து தெரிவித்ததுடன், அந்த நிபந்தனைகளின் அடிப்படையில் இரகசிய வாக்குமூலத்தை வழங்க சம்மதித்தால், பிற்பகல் இடைவேளையின் பின்னர் சந்தேகநபரின் இரகசிய வாக்குமூலத்தை வழங்க முடியும் எனவும் தெரிவித்தார்.
இதன்படி, குறித்த வழக்கு இன்று நீதிமன்றத்தின் பகல் இடைவேளையின் பின்னர் மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே சந்தேகநபர் இது தொடர்பான இரகசிய வாக்குமூலத்தை வழங்கினார்.
இந்நிலையில் துலான் சஞ்சய் உள்ளிட்ட 8 சந்தேகநபர்களையும் எதிர்வரும் ஆகஸ்ட் மாதம் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
, பச்சை குத்தும் நிலைய உரிமையாளரிடம் இரகசிய வாக்குமூலம் !