ஜனாதிபதி வேட்பாளர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தீர்மானம் !

ஜனாதிபதி வேட்பாளர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தீர்மானித்துள்ளார். எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளர்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டியதன் அவசியத்தை உணர்ந்து, இது தொடர்பில் தீர்மானம் ஒன்றை எடுக்கும் நோக்கிலேயே இந்த அறிக்கை கோரப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் மீது துப்பாக்கித் தாக்குதல் நடத்தப்பட்டதை கருத்திற்கொண்டே இந்நடவடிக்கைகள் எடுக்கப்பட உள்ளன. எதிர்க்கட்சி தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாசவுக்கு உயிர் அச்சுறுத்தல் உள்ளதாக வெளிநாட்டு புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளமை பற்றியும் சபாநாயகரின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் சட்டத்தரணி லக்ஷ்மன் கிரியெல்ல மற்றும் எதிர்க்கட்சி தலைவரின் செயலாளர் சட்டத்தரணி திசத் விஜயகுணவர்தன ஆகியோர் இது குறித்து சமீபத்தில் சபாநாயகரிடம் கோரிக்கையும் விடுத்திருந்தனர்.
, ஜனாதிபதி வேட்பாளர்கள் எதிர்கொள்ளும் அச்சுறுத்தல்கள் தொடர்பில் அறிக்கை ஒன்றை பெற்றுக் கொள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் தீர்மானம் !