ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

7 பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டும் தலைமறைவாகியிருந்த மதபோதகர் மட்டக்களப்பில் கைது !

சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் 7 பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டும், தலைமறைவாகியிருந்த மதபோதகர் ஒருவரை இன்று ஞாயிற்றுக்கிழமை (21) மட்டக்களப்பில் கைது செய்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசமொன்றில் அமைந்துள்ள ஒரு தேவாலயத்தில் மத போதகராக செயற்பட்டுவரும் இவர், வெளிநாடு அனுப்புவதாக கூறி பண மோசடி செய்தமை தொடர்பாக சம்மாந்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கொன்று தாக்குதல் செய்யப்பட்டிருந்தது.

இவ்வழக்குக்கு இந்த மதபோதகர் ஆஜராகாமல் தலைமறைவாகி வந்துள்ள நிலையில், அவருக்கு எதிராக நீதிமன்றம் 7 பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் மட்டக்களப்பு தலைமையக பொலிஸாருக்கு கிடைத்த தகவலுக்கமைய, இன்று (21) பகல் 12 மணியளவில் தேவாலயத்துக்கு அருகில் வைத்து பொலிஸார் மதபோதகரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மதபோதகரை நாளை திங்கட்கிழமை (22) நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

, 7 பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டும் தலைமறைவாகியிருந்த மதபோதகர் மட்டக்களப்பில் கைது !

Back to top button