ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

துப்பாக்கிச் சூடு, கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது !

களுத்துறை, கட்டுகுருந்த பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு மற்றும் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகநபர் நேற்று (20) மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்பு பிரிவினரால் அத்துருகிரிய நகரில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

மணியம்கம, அவிசாவளை பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

கொலைக்கு சதித்திட்டம் தீட்டியமை மற்றும் உதவியதற்காக குறித்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்தேக நபர் களுத்துறை தெற்கு பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

கடந்த மே மாதம் 20 ஆம் திகதி இரவு மோட்டார் சைக்கிளில் வந்த இனந்தெரியாத இருவர் களுத்துறை கட்டுகுருந்த பிரதேசத்தில் வீடொன்றில் வைத்து நபர் ஒருவரை சுட்டுக் கொன்றுவிட்டு தப்பிச் சென்றிருந்தார்.

இதேவேளை, இந்தக் குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் இருவர் முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், களுத்துறை தெற்கு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

, துப்பாக்கிச் சூடு, கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் ஒருவர் கைது !

Back to top button