ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த வாகனம் விபத்து !
ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த சொகுசு ஜீப் ரக வாகனம் ஜாவத்தை பகுதியில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
அவர் பயணித்த வாகனமும், கார் ஒன்றும் மோதுண்டதில் நேற்றிரவு (17) இந்த விபத்து நேர்ந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.இதன்போது பாராளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ அத்தநாயக்கவுக்கு எவ்விதப் பாதிப்பும் ஏற்படவில்லை. இந்த விபத்தில் ஒருவர் காயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
, திஸ்ஸ அத்தநாயக்க பயணித்த வாகனம் விபத்து !