ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்
க.உமாமகேஸ்வரனின் உருவச்சிலை திறந்துவைப்பு!


தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின் செயலதிபர் க.உமாமகேஸ்வரனின் உருவச்சிலை வவுனியா மணிக்கூட்டு கோபுரசந்திக்கு அண்மையில் இன்று செவ்வாய்க்கிழமை (16) திறந்துவைக்கப்பட்டது.
கழகத்தின் வவுனியா மாவட்ட அமைப்பாளர் க.சந்திரகுலசிங்கம் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் முதன்மை அதிதியாக கலந்துகொண்ட யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் உருவச்சிலையினை உத்தியோகபூர்வமாக திறந்துவைத்தார்.
அதனைத்தொடர்ந்து அன்னாரது உருவச்சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
நிகழ்வில் தமிழீ்ழ விடுதலைக்கழகத்தின் முக்கியஸ்தர்கள், தமிழ்தேசிய கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகளின் முக்கியஸ்தர்கள்,பொது அமைப்பினர் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
, க.உமாமகேஸ்வரனின் உருவச்சிலை திறந்துவைப்பு!