ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

மட்டக்களப்பில் வானத்திலிருந்து விழுந்த நீல நிற பொருளால் வெடிப்புச் சம்பவம் !

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூநொச்சிமுனை கிராமத்தில் உள்ள வீடொன்றினுள் வெடிப்புச் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. குறித்த வெடிப்பு சம்பவம் திங்கட்கிழமை (15) இரவு 9 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

வீட்டின் அறையொன்றிலேயே குறித்த வெடிப்புச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. பாரிய சேதங்கள் ஏற்படாத நிலையிலும் பாரியளவிலான சப்தம் மிக நீண்ட தூரத்துக்கு கேட்டதாக அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். வானத்தில் இருந்து விழுந்த நீல நிறத்திலான பொருள் ஒன்று வீட்டின் ஓட்டை உடைத்துக்கொண்டு சென்றதாக வீட்டில் தங்கியிருந்தவர்கள் தெரிவிக்கின்றனர்.இது தொடர்பாக மட்டக்களப்பு மாவட்ட தடயவியல் பொலிஸ் பிரிவினர் தீவிர விசாரணைகளை மேற்கொண்டுள்ளதுடன் இராணுவத்தினரும் பொலிசாரும் தொடர்ந்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

, மட்டக்களப்பில் வானத்திலிருந்து விழுந்த நீல நிற பொருளால் வெடிப்புச் சம்பவம் !

Back to top button