ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

கொத்து, ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை குறைப்பு !

சோறு மற்றும் கறி (Rice and curry), ப்ரைட் ரைஸ் (Fried rice) மற்றும் கொத்து (Koththu) என்பவற்றின் விலை 25 ரூபாயால் குறைக்கப்படும் என அறிவித்தல் வெளியாகி உள்ளது.குறித்த தகவலை அகில இலங்கை சிற்றுண்டி உரிமையாளர் சங்கம் தெரிவித்துள்ளது.அத்துடன் பரோட்டா, முட்டை ரொட்டி மற்றும் சிற்றுண்டிகளின் விலை 10 ரூபாயால் குறைக்கப்படும் என்றும் சங்கம் அறிவித்துள்ளது.

மின் கட்டணம்

இன்று (16) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் 22.5 வீதத்தினால் குறைக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொது பயன்பாடுகள் ஆணைக்குழு (Public Utilities Commission) அறிவித்துள்ளது.பொதுமக்கள் மத்தியில் இடம்பெற்ற கருத்தாடல்களை அடுத்தே இந்த குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டிருந்தது. மின்சாரக்கட்டணம் குறைக்கப்பட்டதைத் தொடர்ந்து, குறிப்பிட்ட சில உணவுப் பொருட்களின் விலையும் குறைக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

, கொத்து, ரைஸ் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் விலை குறைப்பு !

Back to top button