நீரில் மூழ்கி இருவர் பலி !
சிலாபம் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெதுரு ஓயாவில் நீராடச் சென்றவர்களில் இருவர் நீரில் மூழ்கிய நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இவர்கள் நேற்று (14) மாலை நீராடச் சென்றுள்ளனர்.
நீரில் மூழ்கிய ஒருவர் காப்பாற்றப்பட்டதாகவும், மற்றைய நபர் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
உயிரிழந்தவர் 20 வயதுடைய ஹட்டன் பகுதியைச் சேர்ந்தவர்.
உயிரிழந்த இளைஞன் தனது மனைவி மற்றும் 3 பேருடன் தெதுரு ஓயாவில் நீராடச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
அத்துடன், கட்டுகஸ்தோட்டை மடவளை வீதியில் மகாவலி கங்கையின் நீராடும் பகுதிக்கு அருகில் நேற்று (14) இரவு ஆண் ஒருவரின் சடலம் காணப்பட்டது.
ஹந்தகல, ஹலோய பிரதேசத்தைச் சேர்ந்த 43 வயதான நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
சடலம் கண்டி வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை கட்டுகஸ்தோட்டை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
, நீரில் மூழ்கி இருவர் பலி !