இந்திய அரசாங்கத்தின் உயர்மட்ட பிரதிநிதிகள் மற்றும் துறைசார் நிபுணர்கள் குழு ஒன்று அடுத்த மாதம் நாட்டுக்கு வருகைதர உள்ளது.இந்திய அரசாங்கம் முன்னெடுக்கும் உட்கட்டுமான, அபிவிருத்தி திட்டங்களின் நிலை குறித்து கண்டறியவே இந்தக் குழு வருகிறது.
அபிவிருத்தி திட்டங்கள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன என்பதை மதிப்பாய்வு செய்யும் வகையிலும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்திக்கொள்ளும் வகையிலும் பொருளாதார அபிவிருத்தி நடவடிக்கைகளை மேம்படுத்திக்கொள்ளவும் இந்தக் குழுவின் வருகை வாய்ப்பாக இருக்கும் என நம்பிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
, இந்திய உயர்மட்ட குழு அடுத்த மாதம் இலங்கை வருகை !