ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

ஆயிரம் ஆண்டு பழமையான தூபியில் புதையல் தோண்ட முயற்சி: ஐவர் கைது !

புத்தளம் மாவட்டம் கருவலகஸ்வௌ – எகொடபிட்டிய பிரதேசத்தில் ஆயிரம் வருடங்கள் பழமையான தூபியொன்றுக்குள் விளக்கு ஏற்றி பூஜை செய்து புதையல் தோண்டுவதற்கு முயற்சி செய்த ஐவர் நேற்று மாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.

கருவலகஸ்வௌ வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் கருவலகஸ்வௌ பொலிஸ் உத்தியோகத்தர்களும், வனவிலங்கு அதிகாரிகளும் இணைந்து மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இடத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள், விளக்கு உட்பட பூஜை பொருட்களுடன், நூல், சந்தனக்குச்சி, தூபம், அலவாங்கு, மண்வெட்டி போன்ற பொருட்களுடன் கடல் மணலும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவித்த கருவலகஸ்வௌ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

, ஆயிரம் ஆண்டு பழமையான தூபியில் புதையல் தோண்ட முயற்சி: ஐவர் கைது !

Back to top button