Saturday, September 7, 2024
LANKA FIRE🔥 FM Live
HomeSrilanka Local NewsOther Local Newsகசிப்பு வியாபாரம் செய்த பெண் கைது !

கசிப்பு வியாபாரம் செய்த பெண் கைது !

யாழ்ப்பாணம், வட்டுகோட்டை பொலிஸ் பிரிவில் சுழிபுரம் மத்தி பராளாய் வீதி பகுதியில் கசிப்பு வியாபாரம் செய்த குற்றச்சாட்டில் பெண்ணொருவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

யாழ் மாவட்ட. சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சூரிய பண்டாரவின் கீழ் இயங்கும் யாழ். மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் மற்றும் யாழ். மாவட்ட புலனாய்வுப் பிரிவினர் இணைந்த குறித்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

சம்பவத்தில் 47 வயதான பெண் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் 10போத்தல் கசிப்பு மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விசாரணைகளின் பின்னர் சந்தேகநபர் மல்லாகம் நீதிமன்றில் முற்படுத்தபடவுள்ளார்.

, கசிப்பு வியாபாரம் செய்த பெண் கைது !

தொடர்புடைய செய்திகள்

இன்றைய விளம்பரங்கள்

------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- ------------------------------------------- -------------------------------------------

அதிக பார்வைகள்