ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

பலத்த காற்று,மழை, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை !

நாட்டில் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்யலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிக மழை பெய்யக்கூடும் என திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.

ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டத்தின் சில இடங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் இடியுடன் கூடிய மழை பெய்யலாம் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

இதேவேளை, காங்கேசன்துறையிலிருந்து மன்னார் ஊடாக புத்தளம் வரையிலும் ஹம்பாந்தோட்டையிலிருந்து பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணித்தியாலத்துக்கு 60 முதல் 65 கி.மீற்றர் வரை அதிகரிக்ககூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள வளிமண்டலவியல் திணைக்களம் குறித்த கடற்பரப்பிராந்தியங்கள் கொந்தளிப்பாக காணப்படும் எனவும் கூறியுள்ளது.

திருகோணமலையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக காங்கேசன்துறை வரையிலும் புத்தளத்திலிருந்து கொழும்பு மற்றும் காலி ஊடாக ஹம்பாந்தோட்டை வரையிலும் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 50 கிலோமீற்றர் வரை வீசக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

இதனால் மீனவர்களையும் கடல்சார் ஊழியர்களையும் அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

, பலத்த காற்று,மழை, கடல் கொந்தளிப்பு குறித்து எச்சரிக்கை !

Back to top button