ஏனைய பிராந்திய செய்திகள்பிராந்திய செய்திகள்

கதிர்காம உற்சவத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு !

கதிர்காம உற்சவத்திற்கு வருகை தரும் பக்தர்களின் சொத்துக்களை திருடும் கும்பல் அதிகரித்துள்ளதாக அங்கு வருகை தரும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

கதிர்காம உற்சவம் நடைபெறும் இடங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள மோட்டார் சைக்கிள்களிலிருந்து எரிபொருள் திருடப்படுவதால் அங்கு வருகை தரும் மக்கள் அசௌகரியத்துக்கு உள்ளாகியுள்ளனர்.

இந்நிலையில், முச்சக்கரவண்டிகளின் பெட்டரி உட்பட உதிரிப்பாகங்களை திருடிச் செல்லும் சம்பவங்களும் பல பதிவாகியுள்ளன.

மேலும், உற்சவத்திற்கு வருகை தரும் மக்களின் கையடக்கத் தொலைபேசிகள் திருடப்படுவதுடன் நேற்று (12) பல்கலைக்கழக மாணவியொருவரின் இரண்டு இலட்சம் ரூபா பெறுமதியான கையடக்கத் தொலைபேசி ஒன்று திருடப்பட்டுள்ளது.

இது தொடர்பில் விசேட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் பொலிஸாரிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

, கதிர்காம உற்சவத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரிப்பு !

Back to top button